உக்ரைன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 13 பேர் பலி
கீவ்: மத்திய உக்ரைனில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில்கள் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியது. 13 பேர் கொல்லப்பட்டனர்; 10 பேர் காயமடைந்தனர். இது பயங்கரமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்யா நமது மக்கள் மீது எத்தனை பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளது? ரஷ்யாவின் இத்தகைய தீவிரமான செயல்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதார ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த போர் நீடிக்கும் வரை, பொருளாதார தடைகளை ஒருபோதும் தளர்த்தக்கூடாது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் புதிய, கடுமையான தடைகளை விதிக்க வேண்டிய நேரம் இது. இத்தகைய உதவிகளை வழங்க முன்வரும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும்
-
மகேஷ் கைதின் போது போலீசாருக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ சேகர்பாபுக்கு சம்மன்
-
தங்கம் சவரனுக்கு ரூ.1,240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
சென்னையில் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
-
சொந்த புத்தியும், சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி தவெக அரசு; ஸ்டாலின் விமர்சனம்
-
இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்து சிதறிய 4 எண்ணெய் கப்பல்கள்; மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்