தினமலர் செய்தி எதிரொலி ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலம் அளவீடு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில், ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலையோரம், சர்வே எண் 373ல், 38 ஆயிரத்து 810 சதுர அடி பரப்பளவில் குளம் மற்றும் அரசு நிலம் இருந்தது. இந்த குளத்தை, அதே பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், மண் கொட்டி சமன்படுத்தி ஆக்கிரமித்திருந்தார்.

இதுகுறித்து, நம் நாளிதழின் ‘டீ கடை பெஞ்ச்’ பகுதியில் சமீபத்தில் செய்தி வெளியானாது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா உத்தரவிட்டதையடுத்து, வருவாய் துறையினர் நேற்று, ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை அளவீடு செய்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், ‘ஆக்கிரமிப்புகள் குறித்து பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் வழங்கப்பட உள்ளது. அதன் பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்றனர்.

Advertisement