அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்:கரூர் மாவட்ட, அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது.

அதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன், பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை மேற்கொள்வது, வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் உறுதி ஏற்பது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, கரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறுவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கமளித்து பேசினார்.கூட்டத்தில், மாவட்ட பாசறை செயலாளர் பாலச்சந்திரன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement