'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

கரூர்:குடித்த டீக்கு பணம் கேட்ட, கடை ஊழியரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கோம்பை பகுதியை சேர்ந்தவர் குமார், 49; இவர், கரூர் அருகே காந்தி கிராமத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள ஆவின் டீ கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கரூர் நெரூர் தெற்கு பகுதியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன், 25, கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு, பணம் தர மறுத்துள்ளார். இதுகுறித்து, தட்டிக்கேட்ட கடை ஊழியர் குமாரை, மணிகண்டன் பாட்டிலால் அடித்துள்ளார். அதில், காயமடைந்த குமார் அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement