சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

3

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள முரசு புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள “முரசு” புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.

வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு 11.30 மணி முதல் நவம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில், ஆந்திர மாநிலம் நெல்லுார் - நரசப்பூர் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
விடிய விடிய...

சென்னையில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவொற்றியூர், மணலி, எண்ணூரில் மழை பெய்துள்ளது. சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 8.7 செ.மீ, விருதுநகரில் 8.5 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.

@block_G@

மழை நிலவரம்



சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 02) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், நீலகிரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்யலாம். தமிழகத்தின் பிற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.block_G

பிரத்யேக வீடியோ!

புயலின் வேகம் அதிகரிப்பு; வானிலை அப்டேட் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே ஒரு கிளிக்!

Advertisement