நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த ராஜேந்திரம் பஞ்., பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர்,
44; விவசாயி. குளித்தலை நகராட்சி, பெரியபாலம் பகுதியை சேர்ந்தவர்
பிரசன்னா, 32; சுகாதார ஆய்வாளர்.
இந்நிலையில், சுதாகருக்கு
பாத்தியப்பட்ட நிலத்தின் அருகே, பாலசுப்பிரமணியன் என்பவரின், 50
சென்ட் நிலத்தை, கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன் சுத்த கிரயத்திற்கு
பிரசன்னா வாங்கியுள்ளார். தற்போது, சுதாகரின் நிலத்தில், தனக்கு
சொந்தமான நிலமும் உள்ளது எனக்கூறி, பிரசன்ன கேட்டு வந்துள்ளார்.
இதனால்,
குளித்தலை உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகர் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, 28
மதியம், 1:45 மணிக்கு, சுகாதார ஆய்வாளர் பிரசன்னா, சுதாகரை தகாத
வார்த்தைகள் திட்டி, கல்லால் தாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட
சுதாகர், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து
சுதாகர் அளித்த புகார்படி, சுகாதார ஆய்வாளர் பிரசன்னா மீதும்; அதே
வழக்கில் பிரசன்னா அளித்த புகார்படி, சுதாகர் மீதும் குளித்தலை போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு