வீடு விற்பதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி

புதுச்சேரி: வீட்டை விற்பதாக கூறி ரூ.65 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, ஜான்சி நகரை சேர்ந்தவர் வளர்மதி,55. இவருக்கு பூமியான்பேட்டையை சேர்ந்த அனுசியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு பூமியான்பேட்டை, ஜவகர் நகரில் உள்ள தனது வீட்டை அனுசியா, வளர்மதிக்கு விற்பதாக கூறி பல்வேறு தவணைகளில் ரூ.65, லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், அனுசியா வளர்மதிக்கு அந்த இடத்தை விற்காமல் தனது மகள் ஜான்சி நகர் வச்சலா, மகன்கள் எல்லைபிள்ளைசாடியை சேர்ந்த ராஜ்குமார், ராம்குமார் ஆகியோர் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

இதையடுத்து மூவரிடம் பணத்தை தருமாறு வளர்மதி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தரவில்லை. இதுகுறித்து வளர்மதி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement