பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்
ஆம்பூர்: ஆம்பூர் அருகே தீபாவளி விற்பனைக்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 10லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் சீனிவாசன், 62. இவர், அப்பகுதியில் உள்ள கமல், 45, என்பவரது வீட்டில், தீபாவளி விற்பனைக்காக, அனுமதி பெறாமல், பாதுகாப்பு வசதி எதுவும் செய்யப்படாமல் பதுக்கி வைத்திருப்பதாக, வேலுார் ஓ.சி.ஐ., தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், நேற்று இரவு, 9:00 மணி அளவில் திடீர் சோதனை நடத்தியதில், அங்கு, 100 பெரிய அட்டை பெட்டிகளில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement