பாலியல் வழக்கில் சிக்கிய எஸ்.பி.,க்கு முன் ஜாமின்
காரைக்கால்: காரைக்காலில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட எஸ்.பி.,க்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில், சுப்ரமணியன் எஸ்.பி.,யாக பணியாற்றியபோது, 28 வயது பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டது. சுப்ரமணியன் புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்தபின்னரும் பெண் போலீசிடம் வீடியோ அழைப்புகளில் பேசி வந்தார். இது பெண் போலீசின் கணவருக்கு தெரியவந்து, சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து,விசாரணைக்குழு அமைப்பட்டு, சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், நகர போலீசார் கடந்த செப்., 29ம் தேதி எஸ்.பி., சுப்ரமணியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை சுப்ரமணியனை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இதனிடையே பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்.பி., சுப்ரமணியன் முன்ஜாமின் பெற நீதிமன்றத்தை நாடினார். எஸ்.பி., சுப்ரமணியனுக்கு நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனிடையே இவர், காரைக்கால் நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் ஆஜர் ஆவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு