நவ., 1ல் மணல் லாரிகள் வேலை நிறுத்தம்
சென்னை: தமிழகத்தில் மணல், கருங்கல் ஜல்லிகள் எடுத்து செல்லும் லாரி உரிமையாளர்கள், நவ., 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து, தமிழக மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:
தமிழகத்தில், பெரும்பாலான கிரஷர் உரிமையாளர்கள், அதிக பாரம் ஏற்றினால் மட்டுமே, லோடு வழங்குவதாக கட்டாயப்படுத்துகின்றனர். இதை நம்பி, அதிக பாரம் ஏற்றினால், சோதனைச் சாவடிகளில், காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.
இதன் காரணமாக, லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. குவாரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே, மணல், மண், எம்.சாண்ட், கருங்கல் ஜல்லிகளை, லாரிகளுக்கு வழங்க வேண்டும் என, கனிமவளத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதை அமல்படுத்த, கிரஷர் உரிமையாளர் மறுப்பதால், லாரி உரிமையாளர்களும், ஓட்டுனர்களும், சட்ட நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, கனிமவளத்துறை உத்தரவை கடைபிடிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இது குறித்து, போக்குவரத்து துறையில், முறையிட்டு இருக்கிறோம். இந்த விவகாரத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, நவ.,1 முதல் மணல், மண், எம் சாண்ட், கருங்கல் ஜல்லிகள் ஏற்றி செல்லும் லாரிகள், அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பூங்கா புதர்களில் தஞ்சமாகும் காதல் ஜோடிகள் சிங்க பெண்கள் அதிரடிப்படை களமிறங்குமா?
-
6 கிலோ குட்காவுடன் குன்னுார் ஆசாமி கைது
-
இந்தியாவில் நிமிடத்திற்கு 4 பேருக்கு பக்கவாதம் அப்போலோ மருத்துவமனை பிரிவு தலைவர் தகவல்
-
பெருந்துறை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1 கோடி பறித்த 7 பேருக்கு வலை
-
எஸ்.ஐ.ஆர்., போராட்டம் குறித்த கருத்தரங்கு
-
இயற்கை வேளாண் விளைபொருள் உழவர் சந்தைகளில் விற்பனை