பழநி அருகே வெடிச்சத்தம் அதிர்வு
ஆயக்குடி: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே வெடிச்சத்தத்தை தொடர்ந்து அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர்.
பழநி அருகே புது ஆயக்குடி, பழைய ஆயக்குடி, கணக்கம்பட்டி, கோம்பைப்பட்டி, டி.கே.என். புதூர் பகுதிகளில் நேற்றிரவு 10:10 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து லேசான அதிர்வு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். சிலர் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் வந்து நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
-
2 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்
-
உள்ளாட்சி ஊழியர்களுக்கு போனஸ்
-
வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய பட்டு போன மரம் வெட்டி அகற்றம்
-
நவம்பரில் முதல்வர் இல்லம் முன் போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
-
10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு பாடம் கட்டாயம்: சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவிப்பு
Advertisement
Advertisement