உள்ளாட்சி ஊழியர்களுக்கு போனஸ்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2025–26ம் ஆண்டிற்கான அடாக் போனஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நகரட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் சி பிரிவு ஊழியர்கள் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான போனஸ் திட்டத்திற்கு உட்படாத பி பிரிவு கெசட்டட் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் 30 நாட்களுக்கான ஊதியம் அடாக் போனசாக வழங்கப்படும்.
போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.7,000 என்ற அளவில் முன்பு போலவே தொடரும். இந்தச் போனஸ் சலுகையைப் பெற தகுதியான ஊழியர்கள் கடந்த மார்ச் 31 வரை பணியில் இருந்திருக்க வேண்டும். 2025–-26ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து சேவையாற்றியிருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்குக் குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றிய காலத்தின் அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி இந்த போனஸ் தொகை கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
மேலும்
-
கழிவறையில் மாணவர் மீது தாக்கு வலைதளங்களில் வீடியோ வைரல்
-
40 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது ரூ.1.25 லட்சம், கார் பறிமுதல்
-
பஸ் சக்கரத்தில் சிக்கி ஜோதிடர் பரிதாப பலி
-
அதிகாரிகளும், மக்களும் கடமையுணர்வுடன் செயல்பட்டால் மாநிலம் முழு வளர்ச்சி அடையும்; அமைச்சர் வெங்கடரமணன்
-
குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவ் கைது
-
ஆன்லைன் லாட்டரி விற்பனை 3 பேர் கைது