மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தியவர் தப்பி ஓட்டம்

ஆத்துார்: ஆத்துார் டவுன் போலீசார், அய்யனார் கோவில் ஏரியில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், 35, என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும், அதில், 4 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்ததும் தெரிந்தது.

லாரியை, ஸ்டேஷனுக்கு கொண்டுவரும்படி போலீசார் கூறினர். லாரியை ஓட்டி வந்த பிரபாகரன், உப்பு ஓடை பகுதியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த லாரியை, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த போலீசார், பிரபாகரனை தேடுகின்றனர்

Advertisement