இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 27.1 சதவீதத்திலிருந்து 2.6 ஆக குறைந்தது!
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை சரசரவென குறைந்துள்ளது. 2011ல் 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம், 2023ல் 2.6 சதவீதமாக சரிந்துள்ளது. இதன் மூலம், 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், 49.6 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வறுமை ஒழிப்பு மிகவும் முக்கியமானது. வறுமையால் மக்களின் உணவு, கல்வி, மருத் துவம் உள்ளிட்ட அடிப் படை தேவைகள் பாதிக் கப்படுவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயராமல் தேக்கமடைகிறது.
சுருக்கமான அறிக்கை
இதை கருத்தில் கொண்டு, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வாயிலாக அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம் என்ற பெயரில் சுருக்கமான அறிக்கையை சமீபத்தில் உலக வங்கி வெளியிட்டது. இதில், நாட்டு மக்களின் வருமானம் மற்றும் நுகர்வு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாழ்க்கைத் தரம் போன்ற பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் வறுமை குறைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உலக வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான 12 ஆண்டுகளில், ஒரு நாளுக்கு 400 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழ்ந்த மக்களின் விகிதம் 57.7 சதவீதத்தில் இருந்து 16.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. தீவிர வறுமைக்கான அளவீடு என்பது ஒரு நாளுக்கு 300 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழ்வது. அந்த வருவாய்க்குள் வரும் மக்களின் விகிதம் இந்தியாவில் 27.1 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக சரிந்துள்ளது. இதன் மூலம் 49.6 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
இடைவெளி
மக்களின் நுகர்வு அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உயர்வு, குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்தது, உணவு மானியம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டது ஆகியவை வறுமை குறைய முக்கிய காரணங்களாக அமைந்து உள்ளன. இருப்பினும், வருவாய் அடிப்படையில் ஏழை களுக்கும், பணக்காரர்களுக் கும் இடையிலான இடைவெளி அதிகமாக உள்ளது.
2023ல் அதிக வருவாய் ஈட்டும் 10 சதவீத நபர்களின் சராசரி வருவாய், குறைந்த வருவாய் ஈட்டும் 10 சதவீத நபர்களின் வருவாயை விட 13 மடங்கு அதிகமாக இருந்தது. நாட்டில் ஒட்டுமொத்தமாக வறுமை குறைந்திருந்தாலும், ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதிகள் குறிப்பிட்ட மாநிலங்களில் குவிந்துள்ளன.
உற்பத்தி திறன்
உத்தர பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் மட்டும், நாட்டின் மொத்த ஏழைகளில் 57 சதவீதம் பேர் வசிக்கின்றனர். இந்த மாநிலங்களில் உற்பத்தி திறன் மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கினால், வறுமையை மேலும் குறைக்க முடியும். கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் வறுமை குறைவாக உள்ளது.
ஒரு நாளுக்கு 400 ரூபாய் வருவாய் அளவீட்டின்படி, நகர்ப்புறங்களில் வறுமை 8.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வறுமை 19.3 சதவீதமாகவும் உள்ளது. ஏழைகளில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்புத்திட்டம், நூறு நாள் வேலைத் திட்டம், இலவச பஸ் பயணத்திட்டம், இதன் பலன்கள் எல்லாம் யாருக்கு செல்கின்றன? இந்த அறிக்கையின்படி
இந்தியாவில் வெறும் மூன்று கோடி பேர்கள் மட்டுமே வறுமைப்பிடியில் சிக்கி இருக்கிறார்கள். அதாவது ஒருவேளை சாப்பாடு கிடைச்சா அவன் பணக்காரன் போல இருக்கு
இந்த செய்தியெல்லாம் படிக்காதவன் கூட நம்பமாட்டான். இங்கு தனியார் கம்பனியில் வேலை செய்யும் பெரும்பாலான ஊழியர்கள் சம்பளம் பத்தாமல் கடன் வாங்கி கிரெடிட் கார்டு தேய்த்து தன குடும்பத்தையும் குழந்தைகளையும் படிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள்.
RAVINDRAN உன் சொந்த கதையை சோகமாக சொல்லாதே.
வறுமை காரணமா எதையாவது கலந்து குடிச்சிட்டு போய்ச் சேர்ந்த குடும்பம் எப்படி இந்த கணக்குல வரும் ??
அடுத்த அதிரடி ஏழைகளைக்கண்டு பிடித்து தருபவர்களுக்கு 15 இலட்சம் பரிசு
கண்டுபிடித்துவிட்டேன். அந்த ஏழை திரு சுந்தரம் விஸ்வநாதன் தான்
அடுத்த ஆண்டில் இருந்து, அல்லது 2029 தேர்தலுக்காக, நாட்டுக்கு பெட்ரோலுக்கு கச்சா எண்ணை இறக்குமதி செய்வது போல ஏழைகளையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும்.
திராவிடக் வழி கல்வி கற்றவர்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்த ஒரு விஷயம். இங்கு சிலர் இட்ட கருத்துக்களைப் பாருங்கள்
நான் குஜராத்துல படிச்சவன்
குஜராத்தில் சமச்சீர் கல்வி இல்லையே...மக்கு மாணவரோ
நல்ல செய்தி .நடப்பது மோடி யுகம் . இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 27.1 சதவீதத்திலிருந்து 2.6 ஆக குறைந்தது வருமான அடிப்படையில் ஏழைகள் என தீர்மானிப்பதை விட செல்போன் வைத்திருப்பவர் பணக்காரர் என்று தீர்மானித்தால் ஒரு ஏழை கூட இந்தியாவில் மிஞ்ச மாட்டார்கள் .பிச்சைக்கார்களிடமும் செல்போன் உள்ளது .
2016 ல் இந்தியாவில் இருந்து மொத்த கருப்பு பணத்தையும் ஒழித்ததினால் உத்தர பிரதேச தேர்தலில் 2017 ல் வென்றதினால், இப்போது 2027 ல் மீண்டும் உத்தர பிரதேசத்தில் தேர்தல் வருவதால் இந்தியாவில் ஏழைகளே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது
காங்கிரஸ் திராவிடியா ஆகிலேஷ் மம்தா போன்ற நாட்டை கொள்ளையடிக்கும் திருடர்களுக்கு மோடியின் ஆட்சி ராமராஜ்யமே
ஊழலற்ற நல்லரசு, ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், நாடு வளம் பெறும். வறுமை நிலை மாறும்.
15 லட்சம் போட்டு எல்லோரும் லட்சாதிபதிகள் ஆயிட்டோம்.
அப்பாவியா சாமியா வேலைசாமிய எல்லோரும் ஒண்ணா இருக்கும் தண்ட சோறு கும்பல் தானேமேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி