சித்தராமையா மீதான பாலியல் குற்றச்சாட்டு: உண்மை இல்லை என போலீசார் விளக்கம்
.பெங்களூரு: 'கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது, பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை' என்று, போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, 78. இவர் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறும் வீடியோ, 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டது. அந்த வீடியோ மேலும் பரவாமல் தடுக்க, நீதிமன்றத்தில் சித்தராமையா தடை வாங்கினார்.
மேலும், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவரே நேரில் சென்று புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், டில்லியை சேர்ந்த ரித்தேஷ்குமார் பாண்டே, 22 என்பவரை கைது செய்தனர். அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வீடியோவில் பேசிய பெண் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடந்தது.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பெண் பேசியது அனைத்தும் புனையப்பட்ட, வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கதை. இதுவரை நடந்த விசாரணைகள், பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து பார்க்கும் போது, வீடியோவில் கூறிய பாலியல் குற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை; அது உண்மையும் இல்லை.
வீடியோவை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீடியோவின் உண்மை தன்மை, பிற தொழில்நுட்ப ஆதாரங்களை அறிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுக்கப்பட்ட பின், யாரிடம் இருந்தது. யாரிடம் சென்றது என்றும் விசாரணை நடக்கிறது.
அந்த வீடியோ 2023ல் எடுக்கப்பட்டு, 2026 செப்டம்பரில் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. பொறுப்பான பதவியில் இருந்தவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீத்தாராமையா மிக நன்றாக நடனம் ஆடுவாரு சென்ற ச.ம தேர்தலில் வெற்றி பெற்றபின் தன் நெருங்கிய ஆதரவாளர்கள் மத்தியில் உ.பா சாப்பிட்டு பிரம்மாதமாக ஆடினாரு .ஒரு தம்பி ரகசியமாக வீடியோ எடுத்து வெளிவந்தது .மேலும்
-
செம உதை வாங்கி மண்ணைக் கவ்விய காங்கிரஸ்! : அந்துமணி பதில்கள்
-
ஸ்டார்ட் அப், ஏ.ஐ.எப்., பண்டுகளில் பி.எப்., பணத்தை முதலீடு செய்ய திட்டம்
-
சந்தை விலை நிலவரம்
-
தினம் ஒரு பங்கு
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
-
'மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'