மதுபானங்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது
ராசிபுரம்:அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக, பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சட்டவிரோதமாக மதுபானங்கள்
பதுக்கி வைத்து விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராசிபுரம் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில்
சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராசிபுரம் ஆர். புதுப்பாளையம்
அம்பேத்கர் நகர் பகுதியில், சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை
பிடித்து விசாரித்தனர். அதில், ஆர்.புதுப்பாளையம் அம்பேத்கர் நகரை
சேர்ந்த மதியழகன் மகன் வினோத், 34, என்பது தெரியவந்தது. அவரிடம்
நடத்திய சோதனையில், மதுபான கடைகளில் இருந்து மொத்தமாக
மதுபாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக
பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வினோத்தை
கைது செய்தனர்.
மேலும்
-
அரசு விழாவில் ஆளும்கட்சியை பாராட்டிய அதிமுக எம்எல்ஏ; விழபோகிறதா அடுத்த விக்கெட்?
-
நோட் பண்ணிக்கோங்க; மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஜன., 10ல் தொடக்கம்
-
தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
-
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
-
போதை மாத்திரை கடத்தல் 2 பேர் கைது
-
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்