வசந்த நகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் அவதி

பள்ளிப்பாளையம்:வசந்த நகர், ஜோதி நகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட வசந்த நகர், ஜோதிநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்பு உள்ளது. இப்பகுதிக்கு பஞ்., மூலம், கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் வழங்கவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பல முறை பஞ்சாயத்தில் தெரிவித்தும், அதிகாரிகள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். குடிப்பதற்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.எனவே, சீரான குடிநீர் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement