பெருந்துறை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1 கோடி பறித்த 7 பேருக்கு வலை
பெருந்துறை:பெருந்துறை ரியல் எஸ்டேட் அதிபரிடம், ஒரு கோடி ரூபாய் பறித்து சென்ற ஏழு பேர் கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ராஜேந்திரபிரசாத் வீதியை சேர்ந்தவர் அருள்குமார், 55; பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது நண்பர் பெருந்துறை, தாய் நகரை சேர்ந்த சிவராஜ். இருவரும் சேர்ந்து காஞ்சிக்கோவில் ரோட்டில் சாய்பாபா கோயில் கட்டி வருகின்றனர். பெருந்துறை, காஞ்சிக்கோவில் வீதியை சேர்ந்தவர் விஸ்ரூத். இவரிடம் கோவில் கட்ட நிதி கேட்டுள்ளனர். அப்போது தனது தந்தை நந்தகுமாருக்கு தெரிந்த நபர்கள் உள்ளனர். அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், 1.15 கோடி ரூபாய் வங்கி கணக்கில் போட்டு விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து நந்தகுமார் அலுவலகத்துக்கு அருள்குமார் சென்றுள்ளார். அங்கிருந்த நந்தகுமார், அவரின் மகன் விஸ்ரூத் ஆகியோர், திருப்பூரை சேர்ந்த குமாரசாமி என்பவரை அறிமுகப்படுத்தி, அவரிடம் பணம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம், பணத்துடன் கோயில் கட்டும் இடத்தில், அருள்குமார், சிவராஜ் ஆகியோர் ஒரு கோடி ரூபாயுடன் காத்திருந்தனர்.
அப்போது இரண்டு கார்களில் வந்த குமாரசாமி உள்ளிட்ட ஏழு பேர், இருவரையும் தாக்கி விட்டு பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அருள்குமார் கொடுத்த புகாரின்படி, பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்
-
சிட்டியில் சினிமா
-
குழந்தைகளில் பிறவி இதய நோய் பாதிப்பு அறிகுறி அறிந்தால் ஆபத்தில்லை சிகிச்சை இருக்கு வேண்டாம் கவலை
-
24 மணி நேரத்தில் உருவாகிறது புயல்; இந்திய வானிலை மையம் தகவல்
-
'வாய் மட்டும் தான் வேலை செய்யுது; காமெடியை குறிப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்
-
இன்று முதல் வாரணாசி-டில்லி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை; வழித்தடம், இயக்கப்படும் நேரம் இதோ!
-
மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா