மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அன்னூர்:

மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு இன்று (1ம் தேதி) இரவு நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு மகா பைரவர் வேள்வி யாகம் துவங்குகிறது. 8:00 மணிக்கு அஸ்வ பூஜை, கோ பூஜை, ஸ்வான பூஜையும், 108 இளநீரால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 9:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது.

ஐப்பசி மாதத்தை முன்னிட்டு, அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement