24 மணி நேரத்தில் உருவாகிறது புயல்; தமிழகத்தில் நவம்பர் 2,3ல் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

புதுடில்லி: அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது.

அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்; நவ.,2ம் தேதி புயல் ஆந்திரக் கடற்கரையை கடக்கும். வரும் 2ம் தேதி, நீலகிரி மாவட்டத்தில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் 2வது புயல் இதுவாகும். வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான அர்னாப் புயல் ஏனாம் அருகே அதி தீவிர புயலாக கரையை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரத்யேக வீடியோ!

வங்கக்கடலில் அடுத்த புயல்; 24 மணி நேரத்தில் உருவாகும் என வானிலை மையம் முக்கிய அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே ஒரு கிளிக்!

@block_Y@

கனமழைக்கு வாய்ப்பு



சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று (அக் 31), நாளை (நவம்பர் 01), நவம்பர் 3ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நவம்பர் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 2ம் தேதி நீலகிரி, திருவள்ளூரிலும், நவம்பர் 3ம் தேதி கடலூர், விழுப்புரத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
block_Y

Advertisement