குழந்தைகளில் பிறவி இதய நோய் பாதிப்பு அறிகுறி அறிந்தால் ஆபத்தில்லை சிகிச்சை இருக்கு வேண்டாம் கவலை
கோவை: குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் வருவதற்கான காரணிகள், அதற்கான சிகிச்சை முறை உட்பட பல அரிய தகவல்களை கே.எம்.சி.எச்., குழந்தைகள் நல இதய டாக்டர் வினோத் சொன்னார்.
* பிறவியிலேயே இதய பாதிப்பு ஏற்பட என்ன காரணம்? இதை கர்ப்பத்திலேயே கண்டறிய முடியுமா?
பெரும்பாலான நேரங்களில் பிறவியிலேயே ஏற்படும் இதயக் கோளாறுகளுக்கு (Congenital Heart Disease) (இதயத்தில் ஏற்படும் துளைகள் மற்றும் வால்வு அடைப்புகள் போன்றவை) துல்லியமான காரணம் தெரிவதில்லை. எனினும், சிலருக்கு மரபணு சார்ந்த குறைபாடுகளினால், பிறவி இதய கோளாறுகள் வரக்கூடும்.
கருவில் இதயம் உருவாகும்போது, ஆரம்பத்திலேயே நான்கு அறைகளாக தனித்தனியாக உருவாவதில்லை; முதலில் அது ஒரே அறையாகவே உருவாகிறது. அதன்பின்னர், வலது மற்றும் இடது பக்க அறைகளும், மேல் மற்றும் கீழ் அறைகளுக்கும் நடுவே ஒரு சுவர் போன்ற தடுப்பும் உருவாகிறது.
அப்படிச் சுவர் உருவாகும்போது, ஏதேனும் ஓரிடத்தில் அது சரியாக அமையாமல் போனால், இதயத்தில் இதுபோன்ற துளைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 95 சதவீதத்துக்கு மேலான பிறவி இதய கோளாறுகளை கர்ப்ப காலத்திலேயே கண்டறியலாம். 16–20 வாரங்களில், ஃபீட்டல் எக்கோகார்டியோகிராஃபி பரிசோதனை செய்தால் தெரிந்து கொள்ள முடியும்.
* இதயத்தில் ஓட்டை இருந்தால் அது தானாகவே அடைந்துவிடுமா?
சில துளைகள் தானாகவே மூடக்கூடும். துளையின் அளவு, அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து, தானாக மூடுமா என்பதை கணிக்கலாம். இதில் பல்வேறு வகையான துளைகள் உள்ளன. பெரிய அளவிலான துளைகளுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம்.
* இளம் வயதிலேயே மாரடைப்பு அல்லது திடீர் இதயப் பாதிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணங்கள்?
கவாசாகி நோய் (Kawasaki Disease):
இது ஒரு வகையான மாறுபட்ட தொற்றுநோய். இதனால் இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் (Coronary arteries) தொற்று மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. ரத்தக்குழாயில் ரத்த உறைவு ஏற்பட்டு, குழந்தைகளுக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் பெயர் மரபணு சார்ந்த ஹைப்பர் கொலஸ்ட்ராலீமியா (Genetic Familial Hypercholesterolemia).
வழக்கமாக குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் அளவு 130-க்கு குறைவாக இருக்க வேண்டும். ஆனால், இந்த மரபணுக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிறவியிலே, எல்.டி.எல்., அளவு 300 – 400 வரை இருக்கலாம். இதனால் 40– 60 வயதில் ஏற்படக்கூடிய மாரடைப்பு, 10– 20 வயதிலேயே ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
திடீர் மாரடைப்பு:
குழந்தைகளுக்கு இயல்பான இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 80– 100 வரை இருக்க வேண்டும். ஆனால், இக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விளையாடும் போதோ அல்லது தூங்கும் போதோ திடீரென இதய துடிப்பு 200– 300 வரை மிக வேகமாக உயர்ந்து, இதயம் திடீரென செயல்படுவதை நிறுத்தலாம். இதுவே குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் திடீர் இதய இறப்புக்கு காரணமாகிறது.
* இதயக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பான வாழ்க்கை தொடர முடியுமா?
பிறவி இதய கோளாறுகளை, விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளித்தால், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வாய்ப்புகள் அதிகம். சிகிச்சை பெற்ற குழந்தைகள், மற்ற குழந்தைகளை போல பள்ளிக்கு செல்லலாம், விளையாடலாம்; இயல்பாக உணவு உண்ணலாம். அவர்களின் வாழ்க்கை முற்றிலும் இயல்பானதாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
– வித்யா
@block_B@
இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
சுவாசிப்பதில் சிரமம்:
தாய்ப்பால் குடிக்கும்போது அதிக சிரமப்பட்டு, மூச்சு திணறியபடி குடிப்பார்கள். சற்று வளர்ந்த குழந்தைகள் ஓடி விளையாடும்போது எளிதில் சோர்வடைந்து விடுவார்கள் அல்லது பிற குழந்தைகளைப் போல அவர்களால் இயல்பாக விளையாட முடியாமல் மூச்சு வாங்கும்.
எடை கூடாமை:
இதயக் கோளாறின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, குழந்தைகள் நன்றாக சாப்பிட்டாலும் கூட அவர்களது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடை அதிகரிக்காது.
அடிக்கடி சளி, இருமல்:
குழந்தைகளுக்குத் தொடர்ந்து சளி மற்றும் இருமல் பாதிப்பு ஏற்படுவதுடன், அதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையும் ஏற்படும்.
ஆக்சிஜன் அளவு குறைதல் (சயனோசிஸ்/ நீல நிறமாதல்):
பொதுவாக உடலில் ஆக்சிஜன் அளவு, 95 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், சில வகை இதயக் குறைபாடுகளால் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் அவர்களது நகங்கள், நாக்கு நீல நிறமாக மாறக்கூடும். மருத்துவ ரீதியாக இதனை 'சயனோசிஸ்' (Cyanosis) என்பர்.block_B
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி