ஆந்திரா பொன்னி விதை நெல் விற்பனை மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி வேளாண்மைத்துறை சார்பில், துணை வேளாண்மை அலுவலகம் செயல்படுகிறது.

இங்கு பஞ்சப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் மானியத்தில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பருவ மழை பெய்து வருவதால், கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் கிணற்று நீர் பாசனத்தை கொண்டு, நெல் சாகுபடி பணிகள் துவங்குவதற்காக, வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகமாக ஆந்திரா பொன்னி, கோ.52 ஆகிய ரக நெல் விதைகளை விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.

Advertisement