திமுக மாஜி அமைச்சர் மகேஷூக்கு 3 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் உத்தரவு
- நமது சிறப்பு நிருபர் -
தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் அடைக்கப்பட்டுள்ளார். 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைக்காக, இன்று (அக்டோபர் 30) மகேஷ் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மகேஷ் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம்:
* கடந்த மாதம் 18ம் தேதி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரப்பட்டது. அன்று மட்டும் 8 மணி நேரம் விசாரித்துள்ளனர்.
* நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புழல் சிறையில் முறையான உணவு தரப்படவில்லை.
* மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே சிறையில் உணவாக வழங்கப்படுகிறது.
* சிறையில் வழங்கப்படும் சப்பாத்தியை சாப்பிட முடியவில்லை.
* முறையான உணவு வழங்கப்படாததால் உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது.
* வீட்டு உணவு வழங்கக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.
* கைது செய்யப்பட்ட மகேஷ் சிறையில் துாங்கும்போது கூட விளக்கை எரிய விடுகின்றனர். சிறையில் மருந்துகள் கூட முறையாக தரப்படவில்லை.
* மாநில நலனுக்காக நானும் என் குடும்பமும் ரத்தம், வியர்வையை அளித்துள்ளோம். மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கூட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
* எனது அதிகாரத்தை வைத்து நான் தப்பிக்கவில்லை; ஆனால் திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை நான் தப்பிக்க வைத்ததாக கூறுகிறார்கள்.
* நான் ஓடிவிட மாட்டேன்; போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன்.
இவ்வாறு மகேஷ் தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.
வாதங்களை கேட்ட, நீதிபதி சத்தியமூர்த்தி பிறப்பித்த உத்தரவு:
* மகே ஷூக்கு உணவு, மருத்துவ வசதிகளை போலீசார் செய்து கொடுக்க வேண்டும். 3 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தலாம்.
* விசாரணை காலத்தில் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் போலீசார் துன்புறுத்தக் கூடாது.
* மகேஷை தினமும் அவரது வழக்கறிஞர் சிறையில் சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
* நவம்பர் 2ம் தேதி மதியம் 12 மணிக்கு மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் 5 நாட்கள் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரத்யேக வீடியோ!
3 நாள் போலீஸ் கஸ்டடியில் மகேஷிடம் விசாரிக்க அனுமதி; சென்னை நீதிமன்றம் உத்தரவு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
"என் நண்பன் இருக்காண்டா...அவன் உங்களை பழி வாங்குவான்"
தமிழ் நாட்டு பிள்ளைகள் படிக்க மத்திய அரசு பள்ளிகள் வேண்டாம்,
தரமான பள்ளி கட்டிடம் இல்லை... ஆனால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சுடு சோறு, நல்ல வசதிகள் கேட்கிறார்கள்.
எப்போதும் நிதி மட்டும் தான் வேண்டும். பேசாமல் மூன்று வேளையும் உணவுக்கு கோடி ரூபாய் தட்டில் வைத்து குடுங்க. திராவிட மாடல்..முட்டு குடுக்கும் வாய்கள்..ஓட்டு போட்ட அறிவாளிகள்..
குற்ற உணர்வு சிறிதளவு கூட இல்லை. இந்த ரவுடிகளுக்கு இன்னமும் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது
மகேஷ் ஓர் துருப்பு சீட்டு. மிக திறமையான போலீஸ் அதிகாரிகளை வைத்து தீர விசாரியுங்க. திருட்டு குடும்பத்தின் அத்தனை கொள்ளை முதலீடுகளும் அவனுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.
அன்பில் மகேஷ் பொய்மொழி ஜெயிலில் உள்ளாரா? இல்லை விருந்தினர் மாளிகையில் இருக்கிறாரா?
வடக்கர் உணவான சப்பாத்தி கொடுப்பது ஆறிய ஆர்ய சதி.
மும்பை தாக்குதல் நடத்திய கயவர்களுக்கு நாட்டிலேயே பல கட்சிகளும் அமைதி மார்கதத்தவரக்ளும் முட்டுக்கொடுத்துவந்த்துள்ளார்கள். அதே மாதிரி திருட்டு திமுகவும் உங்களுக்கு முட்டுக்கொடுக்கவில்லையா? இல்லை மேலிடத்துக்கு சேரவேண்டிய சமாச்சாரம் அமுக்கப்பட்டுள்ளாதா ? .
Vengai Vayal சட்னி கொடுங்கப்பு .......
சலுகை வேண்டுமா?
சாப்பாட்டுக்கு வழியே இல்லாமல் தப்பு பண்ணி போனவனுக்கு சப்பாத்தியே வரம் தான்.... நமக்கு மூணு வேளை சோறு சொத்து பதவி எல்லாம் இருந்தும் இந்த வேலை பாத்தா...மேலும்
-
நோட் பண்ணிக்கோங்க; மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஜன., 10ல் தொடக்கம்
-
தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
-
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
-
போதை மாத்திரை கடத்தல் 2 பேர் கைது
-
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
அஸ்வின்ஸ் சுவீட்ஸ், ஸ்நாக்ஸ் தீபாவளி பலகார திருவிழா துவக்கம்