அஸ்வின்ஸ் சுவீட்ஸ், ஸ்நாக்ஸ் தீபாவளி பலகார திருவிழா துவக்கம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அஸ்வின்ஸ் சுவீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் தீபாவளி பலகார திருவிழா துவங்கியது.
பெரம்பலுாரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ேஹாம் ஸ்பெஷல் சுவீட்ஸ் மற்றம் ஸ்நாக்ஸ் நிறுவனம், தமிழகம் முழுதும், 45 கிளைகளோடு செயல்படுகிறது. இதன் தயாரிப்பு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் விழுப்புரம் கிளையில், தீபாவளி பலகார திருவிழா இன்று (அக்.,31) துவங்கியது. இந்த பலகார திருவிழா வரும் 3 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து அஸ்வின்ஸ் குழுமம் தலைவர் கணேசன் கூறியதாவது:
அஸ்வின்ஸ் சுவீட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப விதவிதமான பாரம்பரிய சுவீட்ஸ், உருண்டை வகைகள், மில்க் சுவீட்ஸ், நெய் சுவீட்ஸ், முந்திரி சுவீட்ஸ், அரேபியன் ஸ்பெஷல் பக்லவா சுவீட்ஸ் மற்றும் விதவிதமான நுாற்றுக்கும் மேற்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள் தரமான முறையில் தயாரித்து வாடிக்கையாளருக்கு காட்சிபடுத்தியுள்ளோம். இது மட்டுமின்றி, விதவிதமான கிப்ட் வகைகள், நட்ஸ் வகைகள், அழகிய பெட்டிகளில் பேக்கிங் செய்து காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் கிளையில் தீபாவளி பலகார திருவிழாவின் முதல் விற்பனையை தொழிலதிபர் கோபி துவக்கி வைத்தார். இதை பழனிவேல் கல்விக்குழுமம் தலைவர் ராஜேந்திரன் பெற்று கொண்டார். இந்த விழாவில், கடை பொறுப்பாளர் வடிவுகரசி முரளிதரன், மேலாளர் ஷீலா சுப்ரமணியன், திருக்கோவிலுார் மதி அகாடமி டாக்டர் மதிவாணன் மற்றும் கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி