கொங்கணி மொழிக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம்
கொங்கணி மொழியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் 'பாஷிணி' திட்டத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய கொங்கணி மொழிக்கான அதிக தரவுகளை கொண்ட பேழை கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவா மாநில அரசின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை சார்பில், அக்., 22, 23 ஆகிய தேதிகளில் பனாஜியில் 'கோவா ஏ.ஐ., தொழில்நுட்ப மாநாடு 2026' நடைபெற்றது.
'மக்கள், உலகம் மற்றும் முன்னேற்றத்திற்கான செயற்கை நுண்ணறிவு' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா 'பாஷினி' பிரிவும் பங்கேற்றது.
மாநாட்டின் துவக்க விழாவில், 'பாஷினி' ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கொங்கணி மொழிக்கான அதிக தரவுகளை கொண்ட பேழை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் செயல்பாடுகள் மற்றும் உருவாக்க முறைகள் குறித்து 'பாஷினி' குழுவினர் விளக்கமளித்தனர்.
மேலும்
-
பஸ்சில் கிடந்த ரூ.30 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
-
புற்றுநோய் சிகிச்சைக்கான 543 மருந்துகள் 93 சதவீதம் விலை குறைந்தும் பயனில்லை
-
உள்ளாட்சிகளில் 'ரேபிஸ்'தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு: பயன்படுத்தி கொள்ளகால்நடைத்துறை அழைப்பு
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 30.10.2026 )
-
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு