உள்ளாட்சிகளில் 'ரேபிஸ்'தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு: பயன்படுத்தி கொள்ளகால்நடைத்துறை அழைப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் தெரு நாய்களுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடக்கும் நிலையில் தேவைப்படும் உள்ளாட் சி அமை ப்பினர்தகவல் தெரிவித்தால் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என கால்நடைபராமரிப்புத்துறைஅலுவலர்கள்
தெரிவித்தனர்.

மாவட்டத்தில் நகராட்சிகள்,பேரூராட்சிகள், கிராம ஊராட்சி பகுதிகளில் சிறுவர்கள், பெண்கள் எனஏராளமானோர் தெருநாய்க்கடியால்
பா திக்கப்படுவதுஅதிகரித்தது. இதனை தவிர்க்கவும்,நடவடிக்கை எடுக்கவும் மக்கள் குறை தீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து கலெக்டர் துர்கா உத்தரவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை , 'ரே பிஸ்' தடுப்பூசி செலுத்தும் சிறப்புமுகாம்கள் நடத்தப்படுகின்றன. திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் நத்தம், நிலக்கோட்டை, வேடசந்துார் பேரூராட்சிகளில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை கிளை மருந்தகங்களில் முகாம்கள் நடக்கின்றன.

இந்நிலையில் அருகில்உள்ள ஊராட்சிகள்,பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை தெரிவித்தால் உடனுக்குடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவும்,
தேவைப்படும் பட்சத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை உள்ளாட்சி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது: மாவட்டத்தில் தெரு நாய்கள் கடிப்பதால் சிறுமிகள்,பெண்கள், முதியவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்துகலெக்டர் உத்தரவில்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வெறிநோய் குறைப்பிற்காக நாய்களுக்கு'ரேபிஸ்' தடுப்பூசிசெலுத்தும்
பணிகள் நடக்கிறது.எனவே தெருநாய்களின்எண்ணிக்கை, அறுவை சிகிச்சை தேவைப்படும்விபரங்களை ஊராட்சிகள்,பேரூராட்சி
நிர்வாகத்தினர் தெரிவித்தால் முகாம் நடத்தப்படும். மேலும் முகாம்கள்நடக்கும்கால்நடைகிளை மருத்துவமனைகள்,கால்நடை
மருந்தகங்களில் தெரிவித்து பயன்பெறலாம்.

மேலும் நாய்கள்கடித்துவிட்டது என்பதற்காகஅவற்றை தாக்கி உயிரழக்கச் செய்வது சட்டப்படி குற்றம்.அதை செய்பவர்கள் மீது கலெக்டரின் கீழ் இயங்கும் மாவட்ட சமூக விலங்குகள் நல பாதுகாப்புசங்கம்,ப்ளூ கிராஸ் சொசைட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

Advertisement