புற்றுநோய் சிகிச்சைக்கான 543 மருந்துகள் 93 சதவீதம் விலை குறைந்தும் பயனில்லை
சென்னை: புற்றுநோய்க்கான, 543 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டும், முழுமையாக நோயாளிகளுக்கு, பயன் அளிக்காததால், காப்புரிமை மருந்துகளுக்கு, நிதி சலுகை வழங்க, மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாட்டில் விற்பனை செய்யப்படும், புற்றுநோய் மருந்துகளின் விலையும், அதன் மீது உற்பத்தி நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் விதிக்கும் லாபமும் உச்சபட்சமாக இருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மருந்துகளின் உற்பத்தி செலவில் இருந்து, லாப வரம்பை 42.8 சதவீதமாக நிர்ண யித்து, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, 543 மருந்துகளின் திருத்தப்பட்ட விலை பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், சில மருந்து களின் விலை, அதிகபட்சமாக 93.2 சதவீதம் வரை குறைந்திருந்தது. பல மருந்துகள், 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்தன. இதற்கு வரவேற்பு இருந்தாலும், காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலை குறையவில்லை.
இது குறித்து, மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: புற்றுநோய்க்கான பொது மருந்துகளின் விலை குறைத்தது வரவேற்கத்தக்கது. அதே நேரம், காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலை குறையாததால், நோயாளிகளுக்கு பெரியளவில் பயன் அளிக்காத நிலை உள்ளது. குறிப்பாக, 'கீட்ருடா' என்ற புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்தின் விலை, தற்போதும், 2 லட்சத்து 16,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 'பெஸ்கோ' மருந்தின் விலை, 4 லட்சத்து, 93,266 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது போல், காப்புரிமை பெற்ற பெரு நிறுவனங்களின், 36 மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப் படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய - மாநில அரசுகள், நோயாளி களுக்கு நிதி சலுகை வழங்க, முன்வர வேண்டும். இல்லையென்றால், அவற்றை கொள்முதல் செய்து, அரசு சலுகை விலையில், வினியோகிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வெளிநாடுகளில் மருத்துவ மாநாடு என்றபெயரில் மருத்துவர்களை அவர்களது குடும்பத்துடன் அழைத்துச்சென்று செய்யும் செலவுகள் அனைத்தும் மருந்தின் விற்பனை விலையில் சேர்க்கப்பட்டு பாவப்பட்ட நோயாளிகளிடம் வசூல் செய்யப்படுகின்றது. இவற்றிற்கும் அரசு ஒரு கடிவாளம் போடவேண்டும்.
இன்சூரன்ஸ் என்பது சட்டபூர்வ கொள்ளை. அதை அவ்வளவு எளிதாக சரி செய்து விட முடியாது.மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026