மினி பஸ்சில் பெண்ணை சீண்டிய கொத்தனார் கைது
எம்.ஜி.ஆர். நகர்: மினி பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொத்தனாரை, சக பயணியர் உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண், ராமாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, ராமாபுரத்தில் இருந்து மினி பஸ்சில் எம்.ஜி.ஆர்.நகர் நோக்கி சென்றார்.
அப்போது, நெல்லை ஸ்டோர்ஸ் பஸ் நிறுத்தத்தில் ஏறிய 55 வயது நபர், பெண்ணின் அருகில் நின்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டதால், சக பயணியர் உதவியுடன் அந்த நபரை பிடித்து, எம்.ஜி.ஆர். நகர் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கொத்தனார் செல்வம், 55, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
பஸ்சில் கிடந்த ரூ.30 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
-
புற்றுநோய் சிகிச்சைக்கான 543 மருந்துகள் 93 சதவீதம் விலை குறைந்தும் பயனில்லை
-
உள்ளாட்சிகளில் 'ரேபிஸ்'தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு: பயன்படுத்தி கொள்ளகால்நடைத்துறை அழைப்பு
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 30.10.2026 )
-
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு