கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
நாமக்கல்:தமிழ்நாடு
அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர், 12 அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், கடந்த, 23ல், அலுவலக வளாகத்தில்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று, தமிழகம்
முழுவதும், ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, கூட்டுறவுத்துறை
அலுவலகத்தில் பணியாற்றும், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்
சங்கத்தினர், 29 பேர், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில்
ஈடுபட்டனர். ஒரே இடத்தில், மூன்றாண்டு பணி முடித்த சார்நிலை
பணியாளர்களுக்கு, அந்தந்த மண்டலத்தில் கலந்தாய்வு முறையில்
பணிமாறுதல் வழங்க வேண்டும். மதுரை மண்டலத்தில், நிரந்தர
இணைப்பதிவாளர் நியமனம் செய்ய வேண்டும்.
கடந்த, 23ல், சென்னையில்
போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு சார்பதிவாளர் லோகநாயகி பணியில்
இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள்
போராட்டத்தில் ஈடுபட்டதால், கூட்டுறவுத்துறை அலுவலக பணிகள்
பாதிக்கப்பட்டன.
மேலும்
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானவிபத்து: 9 பேர் பலி
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது