பைக் திருட்டு: வாலிபர் புகார்

கரூர்:வெள்ளியணை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பைக்கை காணவில்லை என, போலீசில் வாலிபர் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை சின்னம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா
முத்துமணி, 33; இவர் கடந்த, 27 மாலை யமஹா-ஆர் 15 என்ற, பைக்கை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து ராஜா முத்துமணி சென்ற போது, பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து, ராஜா முத்துமணி போலீசில் புகார் செய்தார்.
வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement