ரூ.30க்கு தரமற்ற அரிசி அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: ‘தரமற்ற அரிசியை வழங்குவதால், மக்களிடையே வரவேற்பு இல்லை’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 250 அமுதம் மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் அறிமுகம் செய்யப்பட்ட 30 ரூபாய் அரிசி, கடந்த 14 நாட்களில், 114.80 டன் மட்டுமே விற்பனையாகி இருப்பதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிசி மக்களிடம் போதிய வரவேற்பை பெறாததற்கு, அது தரமற்றதாக இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. அமுதம் அங்காடிகள் வழியே வழங்கப்படும் அரிசி, தனியார் ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது அல்ல; விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது என்று, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல்லை அரைத்து மெருகூட்டி வழங்கப்பட்டு இருப்பது, இதன்மூலம் உறுதியாகி உள்ளது. ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சற்று மெருகேற்றி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்வதுதான், இந்தத் திட்டம் தோல்வி அடைந்ததற்கு காரணம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நோட் பண்ணிக்கோங்க; மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஜன., 10ல் தொடக்கம்
-
தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
-
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
-
போதை மாத்திரை கடத்தல் 2 பேர் கைது
-
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
அஸ்வின்ஸ் சுவீட்ஸ், ஸ்நாக்ஸ் தீபாவளி பலகார திருவிழா துவக்கம்