கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்தவர் கைது
மானாமதுரை: கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்த மாசானம், 34, கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், அரியூரை சேர்ந்தவர் சரவணகுமார், 35. இவரது மனைவி முத்துலட்சுமி, 31. முத்துலட்சுமிக்கும், அதே ஊரை சேர்ந்த மாசானத்திற்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.
கடந்த, 6 மாதங்களுக்கு முன் முத்துலட்சுமி, மாசானத்தை மானாமதுரைக்கு அழைத்து வந்து, வாடகை வீட்டில் தங்கினார். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து, முத்துலட்சுமி மீண்டும், தன் கணவர் சரவணகுமாருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன், அவரை மானாமதுரைக்கு அழைத்து வந்தார்.
இதில், கோபமடைந்த மாசானம், நேற்று முன்தினம் காலை, வைகை ஆற்றங்கரையில் வைத்து முத்துலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கழுத்தை நெரித்து, ஆற்றுக்குள் தள்ளி தப்பினார்.
முத்துலட்சுமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று அதிகாலை முத்துலட்சுமி உயிரிழந்தார். போலீசார், மாசானத்தை கைது செய்தனர்.
Good Punishment for RunAway Adultery Criminalsமேலும்
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
-
யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூல்; திமுக மாஜி அமைச்சர் மகேஷிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
-
சர்வதேச போட்டிகளில் இருந்து ஆஸி., அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு