சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-நமது நிருபர்-
கடந்த 2016-2021 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக சி. விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கிறது; சி. விஜயபாஸ்கர் வரும் நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமையும் , அவரது மனைவி ரம்யா அடுத்த வாரமும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2024ம் ஆண்டில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தற்போது அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை எழுப்ப அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (21)
K.n. Dhasarathan - chennai,இந்தியா
03 நவ,2026 - 21:18 Report Abuse
விசாரணைக்கு சம்மன் அனுப்பவே 6 வருடங்கள் இனி விசாரணை ஆரம்பித்து என்றைக்கு முடிக்க ? ஒரு வழியாக வழக்கு முடிந்தால் அப்போது வழக்கு போட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராவது உயிரோடு இருப்பார்களா ? வாய்தா கொடுத்தே நீதியை கொன்று விடுகிறார்கள். பிறகு நீதிமன்றம் எதார்க்கு ? புரியவில்லை பலருக்கும். நீதியரசர்கள் விளக்குவார்களா ? 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
03 நவ,2026 - 17:33 Report Abuse
20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன் அவன் மனைவி, மகன் இன்று விடுதலை, நம்புங்க பா நீதித்துறை பரிசுத்தமானது .. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
03 நவ,2026 - 15:13 Report Abuse
ஏற்கனவே 2024ம் ஆண்டில் இருவரும் ஆஜராகி விளக்கம். மீண்டும் 2026 இறுதியில். ..அமலாக்கத்துறை சம்மனை டெல்லியிலிருந்து நடந்து கொண்டு வந்திருந்தால் கூட இரண்டு வருடம் ஆகியிருக்காது. யாரை மிரட்ட அல்லது யாரை திருப்திப்படுத்த இந்த சம்மன்.? 0
0
Reply
சாமி - ,
03 நவ,2026 - 14:25 Report Abuse
இரண்டு வருடங்கள் சுதந்திரமாக விட்ட E.D இரண்டு வருடங்களுக்குப் பிறகு விஜய பாஸ்கர் மட்டுமல்ல அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. இதன் மூலம் E.D இதனை மிகத் தீவிரமாகப் பார்க்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. விசாரணையின் முடிவில் கைது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அது விஜயபாஸ்கருக்கு பேரிடியாக அமையும். 0
0
Reply
சூர்யா - ,
03 நவ,2026 - 14:17 Report Abuse
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இடைத் தேர்தல் அறிவிப்பு வரப் போகும் இந்த நேரத்தில் விஜயபாஸ்கருக்கு இது பேரிடி. இவர் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் எதிர்கட்சிகள் இதனைக் கையில் எடுத்து விளையாடி விடுவார்கள். 0
0
Reply
சந்துரு - ,
03 நவ,2026 - 14:11 Report Abuse
முதல்வர் விஜய் தூய ஆட்சி தரத்தான் நினைக்கிறார். அதற்கு நேர்மாறான எண்ணம் கொண்ட இவர் போன்ற ஊழல் சக்திகளை கட்சியில் இணைத்ததே முதலில் தவறு. இதற்கு மேலும் த.வெ.க சட்ட மன்ற உறுப்பினராக, அமைச்சராக்க இவர்களை முயற்சித்தால் விஜய் மற்றும் த.வெ.கவின் பிம்பம் தமிழக மக்களிடத்தில் முற்றிலும் உடைந்து போய்விடும். 0
0
BHARATH - TRICHY,இந்தியா
03 நவ,2026 - 16:04Report Abuse
யாரு தூய ஆட்சி??? இருக்கிறவன் பூராவும் கஞ்சா பசங்க... தூயா ஆட்சியாம் போயா? இவனுங்களை விட ஊழலே பண்ணினாலும் தி மு க பரவாயில்லை... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
03 நவ,2026 - 14:03 Report Abuse
கடந்த திமுக ஆட்சியின்போது ஓரிரு முறை தில்லி சென்று வந்தார் .... அதன் பிறகு சில வருடங்கள் சட்டத்தின் தொல்லையில்லாமல் இருந்தார் .... இப்போது மீண்டும் பிரச்னை .... இவற்றை வைத்துப் பார்க்கும்போது பாஜக-அதிமுக உறவு முடிந்துபோன சகாப்தமோ என்று தோன்றுகிறது .... பாஜக-தவெக உறவு மலர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது .... 0
0
சூர்யா - ,
03 நவ,2026 - 15:18Report Abuse
அலி சார் உங்க லாஜிக் படி பா.ஜ.க, த.வெ.க உறவு மலர்ந்திருந்தால் த.வெ.கவை சேர்ந்த விஜயபாஸ்கரை திடீரென அமலாக்கத் துறை எப்படி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும்? விராலிமலை இடைத் தேர்தலுக்குப் பின் விசாரணை நடத்தி இருக்குமே? 0
0
Barakat Ali - Medan,இந்தியா
03 நவ,2026 - 16:06Report Abuse
உங்களது வாதம் சரியானதே .... என்ன கணக்கோ தெரியவில்லை .... 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 நவ,2026 - 13:15 Report Abuse
இதுவரை இந்திய வரலாற்றில் இப்படி ஊழல் செய்த அரசியல் ஊழல்வாதிகள் எத்தனைபேர் முறையாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டார்கள் என்று யாராவது சொல்லமுடியுமா? நூற்றில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. பிறகு எதற்கு வீண் வழக்கு, ஏன் நீதிமன்ற நேரம் வீண் செய்யப்படுகிறது?? 0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
03 நவ,2026 - 13:09 Report Abuse
விஜய்க்கு தான் கெட்ட பெயர். தூய சக்தி தூய ஆட்சி என்று தெருவில் போற வரவெங்க எல்லோரையும் மற்றும் முந்தைய ஆட்சியில் ஊழல் செய்த வர்களை சேர்த்து கொண்டு உள்ளார். அண்ணாமலையாவது இதற்கு விதி விளக்க என்று பார்ப்போம். அடுத்த தேர்தலில் அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம். 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
03 நவ,2026 - 12:47 Report Abuse
சேர்ந்ததுதான் சேர்ந்தார் பாஜக வில் சங்கமமாகி இருந்தால் அமலாக்கதுறை தொட்டிருக்காது அல்லவா நேற்று பஞ்சாப்பில் பாஜக வில் இணைந்த 3 திறமை வாய்ந்த ஊழல்வாத எம்எல்ஏ களை பார்த்தாவது கற்றுகொள்ள வேண்டாமா..... 0
0
Kumar Kumzi - ,இந்தியா
03 நவ,2026 - 14:14Report Abuse
பாஜக பெயரை உச்சரிக்காமல் விட்டால் தூக்கம் வராது 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
அரசு வீடுகளில் தனியாரை வெளியேற்ற நோட்டீஸ்! உள்வாடகை மோசடிக்கு முடிவுகட்ட வேட்டை
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு
Advertisement
Advertisement