மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்

- நமது நிருபர் -




அமெரிக்க இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (நவம்பர் 03) நடக்கிறது. இந்த சூழலில் ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக தங்கள் மீது அமெரிக்கா சிறிய அளவிலான தாக்குதல் நடத்தி வருவதாக ஈரான் குற்றம் சாட்டி இருந்தது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி அருகே குஷ்ஷூம் என்ற தீவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை ஈரான் தாக்குவதை தடுக்கவே தற்காப்பு தாக்குதல் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 3 அமெரிக்க ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரானும் தெரிவித்துள்ளது. ஈரான் கூடிய விரைவில் ஒரு தீர்வை விரும்புகிறது. அது நடக்கலாம்; ஒரு உடன்பாடு எட்டப்படுவது சாத்தியம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தாலும், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால் மேற்காசியாவில் பதற்றம் நிலவுகிறது.

Advertisement