இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு

-நமது நிருபர்-

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை அக்டோபர் 31ம் தேதி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 310 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 730 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து 200 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய நிலவரம்

வார துவக்க நாளான நேற்று (நவம்பர் 02) தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 12,775 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 200 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய நிலவரம்

இன்று (நவம்பர் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. கிராம் 200 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.


பிரத்யேக வீடியோ!

அதிரடி காட்டும் தங்கம்; மீண்டும் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரத்தை வீடியோ பார்த்து அறிந்து கொள்ள வேண்டுமா?

இங்கே கிளிக் செய்யவும்

Advertisement