யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூல்; திமுக மாஜி அமைச்சர் மகேஷிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
-நமது நிருபர்-
கடந்த தி.மு.க., ஆட்சியில், அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அனுமதி வழங்குவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார், விருத்தாசலம் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் மற்றும் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகேஷிடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கோரினர். நாளை (நவம்பர் 4) மாலை 5:00 மணி வரை, மகேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், மகேஷுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணைக்காக அவர் கமிஷனர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று மதியம் முதல் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவங்கினர்; யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூல் என மகேஷிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கின்றனர். மகேஷிடம் வாக்குமூலம் பெற்று, அவரது மனைவி ஜனனியிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும்
-
சர்வதேச போட்டிகளில் இருந்து ஆஸி., அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்