முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-நமது நிருபர்-
பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனி நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் அதிகாரிகள் குழு, அந்நாட்டிற்கு ஒரு வாரம் பயணம் மேற்கொள்கிறது.
இக்குழு மேம்பட்ட உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிக்கை: ஜெர்மனி பயணத்தின் போது, ஜெர்மன் தொழில் துறையுடன் நாங்கள், மேம்பட்ட உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை ஈர்ப்பது, தொழில்நுட்ப கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது, புத்தாக்கத்தை வளர்ப்பது மற்றும் தொழில் துறை, கல்வித் துறை ஒத்துழைப்புகளை உருவாக்குவது, ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவோம்.
உற்பத்தி முதல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் வரை, நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க தேவையான திறமை, தொழில்துறை சூழல் மற்றும் உள்கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. இந்தக் கூட்டாண்மைகளை நாங்கள் ஆழப்படுத்தி, இவ்விரண்டிற்கும் தமிழகத்தை, ஒரு விரும்பத்தக்க இடமாக நிலைநிறுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் போராட்டக்காரர்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த லெட்சணத்தில் தவெகவின் அமைச்சரான ரீல்ஸ் கீர்த்தனா தனது குழுவினருடன் முதலீட்டை ஈர்க்கப் போகிறாராம் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கிறது!
katheesh... உங்கள் கருத்தில் முதல் மூன்று வரிகள் மட்டுமே உண்மை...அதை இங்கு சொல்லியதற்கு நன்றி...மத்தபடி உமக்கு அதே இருநூறு.தான்
காத்து உள்ளபோதே
தூத்திக்க
எனது முன்னாள் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீபாவளியின் போது பட்டாசு விற்பனை இல்லாததால் விருதுநகர் மற்றும் சிவகாசி வணிகர்கள் நல்ல முறையில் செயல்படவில்லை. எனது சொந்த கிராமங்கள் உட்பட எனது கிராமங்களைச் சுற்றி பல பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், அவர்கள் மற்ற மாறுபட்ட தொழில்கள் வேண்டும். அவர்களுக்கு மேம்பட்ட தொழில் நுட்பத்தின் உற்பத்தித் தொழில்கள் தேவை, குறைந்த ஊதியத் தொழில்கள் அல்ல. மேலும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பலர் உயிரிழக்கின்றனர்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதானம் நிலவ ஆதவ் அர்ஜுன தலைமையில் குழு அனுப்பி வைக்கலாம்
ஜெர்மனி தற்போது கடும் நெருக்கடியில் இருக்கிறது. இங்கே வந்து என்ன முதலீடுகளை இழுக்க முடியும்?
உண்மையை சொன்னா தற்குறி கூட்டம் துள்ளுது .....அந்த கூட்டத்தாருக்கு பக்கெட் தூக்குற கூட்டம் அத விட டென்ஷன் ஆகுது ....... நல்லா வாங்கி அனுபவிச்ச பின் தான் தெரியும் ....யாரை எங்க உட்கார வைக்கணும்னுமேலும்
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானவிபத்து: 9 பேர் பலி
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது