வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது

சென்னை: சிறுமிகள் பாலியல் வழக்கில் வீரமணி, அவரது தோழி சாந்தி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் வீரமணி மீது 8 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

புகார் அளித்த சிறுமிகளில் ஒருவர், புழல் சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில், வீரமணியிடம் அழைத்துச் சென்று டிரைவர்கள் லாசர், பார்த்திபனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வீரமணி வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். வீரமணியின் வீட்டு காவலாளியான சீனிவாசனுக்கு, குழந்தைகள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவது பற்றி தெரிந்தும் போலீசாருக்கு தகவல் அளிக்காமல் இருந்ததால் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement