அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால் நீண்ட காலம் நீடிக்கும்; ஈரான் திட்டவட்டம்
-நமது நிருபர்-
மேற்காசியப் பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அவ்வப்போது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவோம் என்று அச்சுறுத்தி வருகின்றன.
ஈரானில் இன்னும் தாக்க வேண்டிய இலக்குகள் இருப்பதாக டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், அது முந்தைய மோதலை விட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படை கூறியதாவது: அமெரிக்க அதிபரால் இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதையோ அல்லது அது எந்த நிபந்தனைகளின் கீழ் முடிவடையும் என்பதையோ தீர்மானிக்க முடியாது. இந்த மோதலுக்கு எந்தவொரு முடிவும் இருக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானின் ராணுவ அதிகாரிகள், புதிய தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். எதிரிக்குச் சேதத்தை விளைவிப்பதற்காக போர்க்களம் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்
-
அரசு வீடுகளில் தனியாரை வெளியேற்ற நோட்டீஸ்! உள்வாடகை மோசடிக்கு முடிவுகட்ட வேட்டை
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு