அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டை நாடுகின்றனர்; உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேண்டுகோள்
-நமது நிருபர்-
அவசர வழக்குகளை முன்னுரிமை அளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா; தொழில்நுட்பத்தின் உதவிகளைப் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் ஆராய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரி, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடும் புதிய போக்கு அதிகரித்துள்ளது.
உயர் நீதிமன்றங்களின் தன்னாட்சி உரிமையையும், குறிப்பாக வழக்குகளைப் பட்டியலிடும் அதிகாரத்தையும் உச்ச நீதிமன்றம் எப்போதும் மதிக்கிறது; இருப்பினும், இத்தகைய கோரிக்கைகள் அடிக்கடி வருவதைக் கருத்தில் கொள்ளும்போது, நமது நடைமுறைகளை இன்னும் சிறப்பாகவும், விரைவாகவும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அவசர வழக்குகளை இன்னும் திறம்பட அடையாளம் காண முடியுமா?
வழக்குகளைப் பட்டியலிடும் நடைமுறைகளை மேலும் வெளிப்படையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும் மாற்ற முடியுமா? தாமதம் ஏற்பட்டால் ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா? ஒரு மனுதாரர் சரியான நேரத்தில் நீதியைப் பெறுவது என்பது, அவர் தலைநகருக்குப் பயணம் செய்யாமல், நாம் உறுதி செய்ய முடியுமா?. இவ்வாறு சூர்யகாந்த் கூறினார்.
மேலும்
-
தினசரி யுபிஐ பரிவர்த்தனை அக்டோபரில் புதிய உச்சம்; முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி சாதனை
-
ஒரே வாரத்தில் ஆந்திராவை தாக்கும் 2வது புயல்; அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட பேரிடர் மீட்பு குழு
-
இலவசங்களை வழங்காதீர்கள்; மக்களின் திறனை மேம்படுத்துங்கள்: கவர்னர் அர்லேக்கர்
-
ஈஷாவின் 'சேவ் சாயில்' மாதிரிப் பண்ணையில், சாயில் புட் வெப் ஸ்கூல் மண் உயிரியல் பயிற்சி
-
சென்னை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
-
அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால் நீண்ட காலம் நீடிக்கும்; ஈரான் திட்டவட்டம்