இலவசங்களை வழங்காதீர்கள்; மக்களின் திறனை மேம்படுத்துங்கள்: கவர்னர் அர்லேக்கர்
சென்னையில் நடந்த தமிழ்நாடு தின விழா கொண்டாட்டத்தில் தமிழக கவர்னர் அர்லேகர் பேசியதாவது: மாநில அரசு அனைத்தையும் இலவசமாக வழங்குவதற்கு பதிலாக மக்களுக்கு பொருட்களை வாங்கும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். மக்கள் தாங்களாகவே செலவு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்.
மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். நமது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அரசால் மட்டும் வளர்ச்சியை அடைய முடியாது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள் பங்கு வகிக்க வேண்டும்.
அரசுத் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை குடிமக்கள் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் கல்வி கற்க அனைத்து வசதிகள் இருந்தபோதிலும், எழுத்தறிவு விகிதம் ஏன் 82% முதல் 85% என்ற அளவில் நீடிக்கிறது. 100% எழுத்தறிவை அடைய முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அர்லேக்கர் பேசினார்.
முதலில் ரேஷன் அரிசியை ரூ 5 ஆக ஆகவேண்டும்.பிச்சை எடுப்பவர் கூட 5 ரூபா கொடுத்து வாங்க முடியும் நிலை இன்று உள்ளது.வறுமை
இதைத்தானே ஐயா, எங்களைப்போன்றோரும் படித்து படித்து கூறுகிறோம். அதற்குத்தான், அரசியல்வாதி வேண்டாம். திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகன் போன்ற நிர்வாகிகள் தான் நாட்டை ஆளவேண்டும் என திரும்ப திரும்ப கூறுகிறோம். திரும்ப திரும்ப பேசற நீ, திரும்ப திரும்ப பேசற நீ.
முட்டா..களுக்கு அறிவுரை கூற கூடாது.
நல்லது சொன்னால்
ஆளுநர் பெயர் தான் கெடும்.
இதுக்குத்தான் டிவிகேயின் எஜமான கழகம் ஐம்பது வருசமா சொல்லிட்டிருக்கு ஆட்டுக்கு தாடி வேணாம்ன்னு .....
நல்லதுதான் சொல்லியிருக்காரு .... ஆனா திராவிட மாடலும் அதன் பி டீமும் பாய்ந்து குதற வாய்ப்பு ....
இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறிகளாக ஆக்கவேண்டாம். அதைக் கொடுக்கின்ற அரசியல் கட்சிக்கும் வாங்குகின்ற மக்களுக்கும் அசிங்கம். அநாகரீகமுமில்லை. இனிமேலாவது கவர்னர்ப் பேச்சைக் ஆட்சியாளர்கள் கொஞ்சம் கேட்க வேண்டும்.
கருணாநிதி தொடங்கி வைத்த இலவச கலைஞர் டிவி. வீதியெங்கும் சாராயக் கடை தொறந்து வைத்து தமிழகத்தை நாசம் செய்து விட்டார்
மேதகு ஆளுநர் அவர்கள் சரியாகத் தான் கூறியுள்ளார்கள்:
"அவசியமானதைத் தவிர" மதிய உணவு, மாணவர்களுக்கான தேவைகள், கல்வி, மருத்துவ சிகிச்சை, குடிநீர் இலவசங்களை முற்றிலுமாக ஒழித்து விட்டால், கடன் வாங்க வேண்டிய நிலைமை இருக்காது.
உழைக்க வேண்டிய நடுவயது இளைஞர்கள் இலவசங்களை வாங்கிக்கொண்டு திண்ணைத் தூங்கிகளாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் உழைக்க ஆரம்பித்தால் நம் நாட்டின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
இலவசத்தை ஒதுக்கிய இளைஞர்கள் அனைவரும் அரும்பாடு படுவது எல்லோருக்கும் தெரியும்.
கடும் உழைப்பால் மட்டுமே நம் நாட்டை உயர்த்த முடியும்.
கண் மூடுத்தனமான இலவசம் நம் நாட்டின் சாபக்கேடு
எங்கே மக்களே சொல்லட்டும் எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் என்று. பிறகு நாங்கள் இலவசங்கள் வழங்குவதை நிறுத்தி, நல்லாட்சி கொடுக்க முயல்கிறோம்.மேலும்
-
இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது: நிர்மலா சீதாராமன்
-
செஞ்சி ஸ்ரீ பாலாஜி குழுமம் 25 ஆண்டு வெற்றிப் பயணம்
-
புயல் பாதித்த ஏனாமில் மத்தியக் குழு ஆய்வு_ மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க முடிவு
-
ம.பி ராஜ்யசபா இடைத்தேர்தலில் சுயேட்சைக்கு காங். ஆதரவு!
-
இருக்கு... ஆனா இல்ல... போட்டி அரசியலில் கண்டுகொள்ளாத கட்சிகள் பயன்பாடின்றி திண்டிவனம் பஸ் நிலையம்
-
மீனம்பாக்கம் விரிவாக்க திட்டத்தை துரிதப்படுத்த தமிழகம் கோரிக்கை: புதிய விமான நிலைய பணியில் சிக்கல்