தினசரி யுபிஐ பரிவர்த்தனை அக்டோபரில் புதிய உச்சம்; முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி சாதனை

3

புதுடில்லி: இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை அமைப்பான யு.பி.ஐ., வாயிலான பரிவர்த்தனைகளின் சராசரி தினசரி மதிப்பு, கடந்த அக்டோபரில் முதன்முறையாக 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

பண்டிகை காலம் தொடங்கிய நிலையில், சராசரி தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கையும் 82.2 கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அக்டோபரில், மொத்தம் 2,547 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது, 2025 அக்டோபரில் பதிவான 2,070 கோடி பரிவர்த்தனைகளை விட 23 சதவீதம் அதிகம்.

அதேபோல், 2026 அக்டோபரில் 31.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது, முந்தைய ஆண்டு அக்டோபரில் பதிவான 27.27 லட்சம் கோடி ரூபாயை விட 16 சதவீதம் அதிகமாகும்.

கடந்த செப்டம்பரில் 2,406 கோடி பரிவர்த்தனைகள் வாயிலாக 29.37 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றன. ஆகஸ்ட் மாதத்தில் 2,450 கோடி பரிவர்த்தனைகள் வாயிலாக 29.82 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது.

Advertisement