ஒப்பந்தக் கூலி குறைப்பதா? 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்: விசைத்தறியாளர்கள் முடிவு
அவிநாசி: ஒப்பந்தக் கூலியைக் குறைத்து வழங்குவதைக் கண்டித்து, தீபாவளி பண்டிகைக்குப் பின் அவிநாசி, சோமனுார், பல்லடம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த, அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி நெசவாளர்கள் நலச் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அவிநாசியில், சங்கத் தலைவர் முத்துசாமி தலைமையில், துணைத்தலைவர் முருகேஷ் முன் னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், 2025 ஏப்ரலில் அமல்படுத்தப்பட்ட ஒப்பந்தக் கூலியைக் குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்தப்படி முழுக் கூலியையும் வழங்க வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள்,எம்.பி.க்கள், கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, தீபாவளி பண்டிகைக்கு பின், அவிநாசி, சோமனுார், பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கிய போனஸை இந்த ஆண்டும் வழங்க வேண்டும்; ஒன்பது சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தொழிலாளர்களின் பிரச்னைகளை ஒற்றுமையுடன் எதிர்கொள்வதுடன், விசைத்தறித் தொழிலையும் அதைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவிநாசி சுற்றுவட்டார விசைத்தறி நெசவாளர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!