டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி

திருச்சி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதமாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும், உச்சநீதிமன்றம் அணை கட்ட அனுமதி கொடுத்து விட்டதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் கூறியிருந்தார்.

இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் அளித்த பதில்,"எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் அதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம். அவர் (கர்நாடகா முதல்வர்) சொல்வது போல் ஏதும் நடக்காது. அணை கட்டுவதற்கு பாஜ ஆதரவு அளித்துவிட்டதாக அவரே சொல்லிக் கொள்ள வேண்டியது தான்," இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement