வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-நமது நிருபர்-
கடந்த 2024ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அரசு கவிழ்ந்தது. போராட்டக்காரர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தொடர்பாக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அடுத்த மாதம் நாடு திரும்பி சட்ட நடவடிக்கைகளை சந்திக்கப் போவதாக ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார். 'மரண தண்டனையை எதிர்கொள்வதை விட ஷேக் ஹசீனாவுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை' என, வங்கதேச அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனா நாடு திரும்பும் நாட்கள் நெருங்கி வரும் நிலையில், சில தினங்களாக வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீவைப்பு சம்பவங்களால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த அமைதியின்மைக்கு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியும் அதன் ஆதரவாளர்களுமே காரணம் என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஹசீனா நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே மோதல் வெடித்துள்ளது. இன்று (நவம்பர் 12) அதிகாலையில், குஷ்டியா தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பார்லிமென்ட் எம்பியான நுஸ்ரத் தபஸ்ஸூமின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டன.
நேற்று (நவம்பர் 11) டாக்காவில் இரண்டு பஸ்களும், ஒரு லாரியும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நவம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்களில் வங்கதேசம் முழுவதும் 22 தீ வைப்பு மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை டாக்காவில் மட்டும் 15 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றன.
மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை