புதிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி: மோகன்தாஸ் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
பாகூர்: ஆதிங்கப்பட்டு, சார்காசிமேடு கிராமத்தில் புதிய குடியிருப்பு பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பொது மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
ஏம்பலம் தொகுதி ஆதிங்கப்பட்டு மற்றும் சார்காசிமேடு கிராமத்தில் புதியதாக உருவான குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குழாய் வசதி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மோகன்தாஸ் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்த, அவரது பரிந்துரையின் பேரில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 10 லட்ச ரூபாய் செலவில், ஆதிங்கப்பட்டு மற்றும் சார்காசிமேடு கிராமத்தில், புதிய குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் வசதி அமைக்கப்பட்டது.
இதனை பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியில், மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூஜைகள் செய்து, குடிநீர் குழாயை மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன் என்.ஆர்.காங்., பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
-
யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூல்; திமுக மாஜி அமைச்சர் மகேஷிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
-
சர்வதேச போட்டிகளில் இருந்து ஆஸி., அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு