உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
கீவ்: உக்ரைன் தெற்கு பகுதியில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. மனிதாபிமான உதவி வழங்கும் மையம் மற்றும் அருகில் இருந்த தங்குமிடம் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், '' மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் இடமாகச் செயல்பட்டு வந்த ஒரு பள்ளி, இந்தத் தாக்குதலுக்கு இலக்கானது; அங்கு மக்கள் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். முதல் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, மக்கள் தஞ்சம் புகுந்திருந்த இடத்தையே குறிவைக்கப்பட்டுள்ளன.
போரை முடிவுக்கு கொண்டு வந்த பதற்றத்தை தணிக்க விரும்பவில்லை; பல படுகொலைகளையே ரஷ்யா திட்டமிடுகிறது. உலக நாடுகள் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைக்க வேண்டும்; ரஷ்யாவிற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்; உக்ரைனுக்கு ஆதரவும் வழங்கப்பட வேண்டும். நாம் உயிர்களைக் காப்பாற்றியாக வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்