புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை

1

- நமது நிருபர் -

வங்கக் கடலில் உருவான 'முரசு' புயல், ஆந்திராவின் நெல்லூர் - நரசாபூர் இடையே கரையை கடந்தது.

ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று முதல் நவம்பர் 5ம் தேதி வரை ஆந்திராவின் 11 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஏனாமின் பெரும்பாலான இடங்களில் இன்று (நவம்பர் 03) லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்; ராயலசீமாவின் பல இடங்களிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏலூர், என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர், பாபட்லா, பிரகாசம், நெல்லூர், சித்தூர், அன்னமய்யா, கடப்பா, பல்நாடு, திருப்பதி மற்றும் நந்தியால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

முரசு புயலால் என்.டி.ஆர் மாவட்டத்தில் இதுவரை பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை என்று மாவட்ட கலெக்டர் லக்ஷ்மிஷா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement