புலிகள் காப்பகத்தில் இளைஞர் மாயம்

கூடலுார்: கேரளா குமுளி ஆதிவாசி காலனியைச் சேர்ந்த பஞ்சனின் மகன் லிபின் 35. இரண்டு தினங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து வனப்பகுதிக்குள் உள்ள ஓடையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். மாலையில் நண்பர்கள் வீடு வந்து சேர்ந்த நிலையில் லிபின் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் ஆதிவாசிகள் இணைந்து லிபினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரியாறு புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நண்பர்களிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement