தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி தங்கம் வென்று புதுச்சேரி வீரர்கள் சாதனை
புதுச்சேரி: தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 45-வது சப் -ஜூனியர் தேசிய பூப்பந்தாட்டப் போட்டி நடந்தது. இப்போட்டியில், பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்று புதுச்சேரி வீரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். மேலும், பெண்கள் பிரிவில் புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த மாணவி சகாஸ்ரீ, முதன் முறையாக “ஸ்டார் ஆப் இந்தியா” என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இது புதுச்சேரி விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு பெருமையாகும். தேசிய அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்ற சாதனை படைத்த மாணவ, மாணவிகள், முன்னாள் சபாநாயகரும் பூப்பந்தாட்டக் கழக தலைவருமான ஏம்பலம் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்பின் போது, பூப்பந்தாட்டக் கழகத்தின் செயலாளர் கருணாகரன், துணைத் தலைவர் பாலமுருகன், பயிற்சியாளர் மணிபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும்
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
-
யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூல்; திமுக மாஜி அமைச்சர் மகேஷிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
-
சர்வதேச போட்டிகளில் இருந்து ஆஸி., அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு